பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை – இராணுவ தளபதி!
Thursday, June 27th, 2019இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் நிறைவடைந்துள்ளதாக உறுதி செய்ய முடியாது என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் இணைந்து புலனாய்வு பிரிவு ஊடாக இந்த பயங்கரவாதிகள் மேலும் வளர்ச்சியடைவதனை தடுப்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.
அப்படியின்றி பயங்கரவாதம் நிறைவுக்கு வந்துள்ளதாக யாராலும் உறுதி செய்ய முடியாது. எப்படியிருப்பினும், அது வளர்ச்சியடைவதாக கூறவும் முடியாது.
இதுவரையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உறவு வளர்ச்சியடைந்துள்ளது. அதன் ஊடாக பயங்கரவாதத்தின் வளர்ச்சி தொடர்பில் தகவல் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா மாத்திரமின்றி சர்வதேசத்துடன் தொடர்பு வைத்து கொள்ள நேரிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|