பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!

Friday, May 24th, 2019

பயங்கரவாத தற்கொலைக்கு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரும் ஹொரவப்பொத்தனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இவர்கள், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தியுள்ளார்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு, தற்போது வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் பிரதான சந்தேகநபரொருவருடன் இவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அவரிடமிருந்து, இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: