பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது – அரசாங்கம் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021

நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை மீண்டும் வலியுறுத்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த ஐக்கிய அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைந்துள்ளன.

இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் திகதியாகிய இன்றையதினம். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் இத் தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தனது ஒற்றுமையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் குறித்த கொடூரமான இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் இந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் இலங்கை விரும்புகின்றது.

அந்தவகையில் நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது என்றும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: