பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்து!
Friday, September 25th, 2020பயங்கவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற சார்க் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் – “எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொலை தொடர்பு இணைப்புகளை முடக்குவது வர்த்தகத்தை தடுப்பது ஆகிய மூன்று சவால்களை சார்க் நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.சார்க் அமைப்பு கடந்த 35 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தை பயங்கரவாதம் அழித்து விட்டது.
மேற்குறிப்பிட்ட மூன்று சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் தான் சார்க் நாடுகளிடம் நீடித்த அமைதி இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்க் நாடுகளுக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. பல உதவிகளையும் செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|