பனையோலை வேய்ந்த குடில்கள் தற்போது அரிது – யாழ் இந்தியத் துணைத் தூதுவர் தெரிவிப்பு

வடக்கு மாகாணங்களில் கிராம புறங்களில் தற்போது பனை ஓலையால் வேயப்பட்ட குடிசைகள் இருப்பது சந்தேகமே என யாழ். தெரிவித்துள்ளார்.
பனை ஆராய்சி நிறுவனத்தால் 2014 முதல் 2016 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய நூல் வெளியிட்டு விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதிலேயே யாழ். இந்திய துணைத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பனை மரங்கள் தென்னாசியாவில் இந்நியா, இலங்கை போன்ற நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றது. நான் இந்தியாவுக்கு அடுத்து இலங்கையிலேயே அதிக பனை மரங்களைக் காண்கின்றேன். இப்பனை மரங்களை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். மேலும் ஒரு சில மரங்களே ஒரு தண்டில் வானத்தை எட்டிப்பார்க்கும் அது போன்று வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் மனமும் உயர்ந்தது. என்றார்.
Related posts:
அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டப...
பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் இயங்கும் - ஆகஸ்ட், டிசம்பர் விடுமுறையும் இரத்து - அரச அலுவ...
|
|