பனைமரங்களின் பரம்பல் செய்மதியில் கணக்கெடுப்பு – பனை அபிவிருத்தி சபை!

Sunday, June 24th, 2018

வடக்கு மாகாணத்தில் உள்ள பனைகளின் எண்ணிக்கை செய்மதி மூலம் கணக்கெடுக்கப்படவுள்ளது. சபையின் உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பனை அபிவிருத்திச் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

செய்மதி ஊடாகப் பனைகளின் பரம்பலைக் கணக்கெடுப்பது தொடர்பான பயிற்சிகள் சபையில் பதினைந்து பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் உதவியுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

போரக்கால நிலையில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. செய்மதி ஊடான கணக்கெடுப்பின் முழுமையான தகவல்கள் இந்த வருட நிறைவுக்குள் தெரியவரும். சுபைத் தலைவர் மருத்துவர் இ.சிவசங்கரின் முயற்சியுடன் வடக்கில் உள்ள பனைமரங்களின் பரம்பல்களின் மொத்த எண்ணிக்கை கணக்கிடப்படவுள்ளன.

Related posts: