பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை!

Wednesday, May 11th, 2016

பனாமா இரகசிய ஆவணங்களில் இலங்கை நாட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பனாமா ஆவணம் வெளியானமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திலுள்ள பிரபல அரசியல்வாதியொருவரின் பெயர் பனாமா இரகசிய ஆவண பட்டியலில் வெளியாகியுள்ளமை குறித்தும் இதன்போது ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும் இதனைக் கண்டு தான் ஆச்சரியப்படவில்லை எனவும், ஆனால் அவர் பௌத்த சம்மேளனத்துடன் தொடர்புடைய ஒருவர் என்ற விதத்தில் தான் ஆச்சரியமடைவதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா குறித்த ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

Related posts: