பத்து நாட்களிற்கு மாத்திரம் இரண்டாயிரம் ரூபா – 14 நாட்களிற்கு முடக்கல் நிலை நீடிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் முதல் பத்து நாட்களிற்கு மாத்திரம் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு 14 நாட்களிற்கு நீடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது 5000 ரூபாய் வழங்கப்பட்டது என தெரிவித்திருந்த அமைச்சர் இம்முறை 10 நாட்களிற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இரண்டாயிரம் ரூபாய் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் எனினும் ஆகக்குறைந்தது இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்குவதை பாராட்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் தற்போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|