பத்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் – இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்!

Friday, December 22nd, 2023


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும்  நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வருகிறது

இதனடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளராக திருமதி வசந்தா பெரேரா, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் – 

அதேநேரம் வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளராக  எஸ்.எல்.டி.கே. விஜயசிங்க ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: