பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!

Saturday, October 31st, 2020

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, நேற்று மட்டும் 633 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து 424ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 495 பேரும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் இராணுத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நான்காயிரத்து 282 பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள இன்னும் ஆறாயிரத்து 123 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: