பத்தரமுல்லை அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, May 18th, 2017

பத்தரமுல்லை பிரதேசத்தைச் சுற்றி அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்கள் நடைமுறைப்படுத்தும் முன்னோடி கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி , 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பிரிவினுள் பத்தரமுல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அலுவலக வேலைகளுக்காக வருகை தரும் வாகனங்களில் 58% ஆனவை மு.ப 7.00 மணியிலிருந்து மு.ப. 9.30 வரையான காலப்பகுதியில் அலுவலகங்களுக்கு வருகைத் தருவதாகவும், பி.ப. 3.00 மணியிலிருந்து பி.ப. 5.30 மணி வரையான காலப்பகுதியில் அலுவலகங்களில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் மு.ப. 7.00 மணியிலிருந்து மு.ப. 9.30 மணி வரையான காலப்பகுதியில் எந்நேரத்திலும் அலுவலகத்துக்கு வருகை தருவதற்கும், பி.ப. 3.00 மணியிலிருந்து பி.ப. 5.30 மணி வரையிலான எந்நேரத்திலும் அலுவலகத்திலிருந்து செல்வதற்கும் ஏதுவான வகையில் நெகிழ்வான அலுவலக நேரங்கள் கொண்ட முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அது தொடர்பிலான சுற்று நிரூபங்களை வெளியிடுவதற்கு குறித்த அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: