“பதிவு நீதிபதி” என்னும் புதிய நிர்வாக நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும் – நீதியமைச்சு தகவல்!

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக “பதிவு நீதிபதி” என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் பியுமந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்
அத்துன் குறித்த நிர்வாக நிலை தற்போதுள்ள நீதிமன்ற பதிவாளர் பதவிக்கு உயர்ந்ததாக இருக்கும் என்றும் அது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்“பதிவு நீதிபதி” என்ற நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த பதவிக்கு அதிகாரங்களை வழங்குவதற்காக நீதித்துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நீதியமைச்சின் செயலாளர் பியுமந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வழக்குகளை விசாரிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பொறுப்பான இந்த பதவிக்காக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த அதிகாரி ஆவணங்கள் ஊடாக சென்று வழக்குகளை விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார’ என்றும் வழக்குகளின் விசாரணையின் தாமதத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது நீதியமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|