பதிவு செய்யப்படாத மோ.சைக்கிளுக்கு 12,000 தண்டம்!

Tuesday, February 6th, 2018

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்தவர் சாவகச்சேரி நீதிமன்றில் 12 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தினார். பதிவுசெய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இரு குற்றங்களுக்குமாக 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Related posts: