பதிவு செய்யப்படாத முன்பள்ளிகளின் நிலைகளை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிப்பு!

Monday, May 21st, 2018

வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்படாத முன்பள்ளிகளின் நிலைகளை ஆராய்வதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டு இதுதொடர்டர்பில் தெரிவிக்கப்படுவதாவது –

கடந்த வாரம் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது என்று கல்வி அமைச்சின் முன்பள்ளிப் பிரிவு தெரிவித்தது.

வடக்கு மாகாணத்தில் இயங்கும் முன்பள்ளிகள் மாகாண நியதிச் சட்டத்தின் கீழ் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்று கடந்த வருட இறுதிப் பகுதி முதல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாமலும் பதிவுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்ட பல முன்பள்ளிகளும் இயங்குகின்றன. வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 513 முன்பள்ளிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 701 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். பதிவு செய்யப்படாத முன்பள்ளிகள் இயங்குவது சட்டத்துக்கு முரணானது.

இவற்றில் இலாபம் உழைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் முன்பள்ளிகளே அதிகம். ஒரு இடத்தில் முன்பள்ளி இயங்கும்போது அதே இடத்தில் இன்னொரு முன்பள்ளியை ஆரம்பித்தல், பயிற்றப்படாத ஆசிரியர்களை சேவையில் வைத்திருத்தல், 15 க்கும் குறைவான மாணவர்களை வைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் பல முன்பள்ளிகளின் அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

எனினும் அனுமதிகள் மறுக்கப்பட்ட முன்பள்ளிகள் தற்போதும் இயங்குகின்றன. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நூறுக்கும் அதிகமான முன்பள்ளிகள் பதிவுசெய்யப்படாமல் இயங்குகின்றன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும், முன்பள்ளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஊடாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:


எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது - வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!
முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கானதாக அமையவேண்டும் –வேலணையில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவ...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் - அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவு...