பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் தீர்மானம்!

Wednesday, May 13th, 2020

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கான பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதனை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் பிரகாரம் இந்த ஆண்டிற்காக ஏற்கனவே பணம் செலுத்தி பதிவு செய்துகொண்டவர்கள் அடுத்த வருடம் பணம் செலுத்துவதிலிருந்து விடுதலை செய்யப்படுவதுடன், இந்த ஆண்டிற்காக பதிவு செய்துகொள்ளாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடுத்த பணம் செலுத்தாமலே பதிவினை புதுப்பித்துகொள்ள முடியுமம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: