பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் தொடர்பில் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் ஊடக அதிகாரிகள் மீதான பொலிஸ்யின் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் தீபிகா உதகம தெரிவித்துள்ளார்
ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற உரிமைகளை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும், அவசர காலங்களில் கூட, சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துக்கு எதிரான செய்திகள் தடுக்கப்பட வேண்டும். எனினும் இதற்காக எவரும் கைது செய்யப்பட்டால் அந்த நடவடிக்கை பாகுபாடற்ற வகையில் இடம்பெற வேண்டும் என்று தீபிகா உடகம கோரியுள்ளார்.
இந்த கைதுகள் தன்னிச்சையாகவும், பாரபட்சமாகவும் அமையக்கூடாது என்றும் அவர் கேட்டுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஒரு விதி மீறப்பட்டால் மாத்திரமே ஒருவரை கைது செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் கைது நடவடிக்கைகள் எந்த விதிமுறையை மீறியமைக்காக மேற்கொள்ளப்படுகின்றன என்ற விடயம் சட்டத்தில் தெளிவாக கூறப்படவில்லை என்றும் தீபிகா உதகம சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சமூக ஊடகங்களின் செய்திகள் பொதுசுகாதாரத்துக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டுமாயின் பொலிஸ்யினர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாக அமைய வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உதகம சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|