பதிலல்ல பிரதியையே அனுப்பினேன் – ஆளுநர் ரெஜினோல்ட் குரே!
Thursday, October 27th, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுநர் என்ற ரீதியில் தன் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கடந்த திங்கட்கிழமை (24) சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் சிங்கள மொழியிலேயே இருந்ததாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது என்ற செய்தியையே மாணவர்கள் அறிவதற்காக அதன் பிரதியை அவர்களுக்கு அனுப்பியதாகவும் மாணவர்களின் கடித்திற்கு பதில் கடிதமோ அல்லது விளக்க கடிதமோ தன்னால் சிங்களத்தில் அனுப்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விடையம் தொடர்பாக பதிலளித்துள்ள அவர், பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒப்பமிட்டு சிங்கள மொழியிலான கடித்தினையே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு வழங்கினர்.
இது குறித்து தன்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவர்கள் எழுதிய மொழியிலேயே அவர்களிற்கு பதில் செய்தி அனுப்பியிருந்தேன். அவர்கள் அதனை ஏற்க மறுத்து மீண்டும் என்னிடம் திருப்பி அனுப்பியதாக அறிகின்றேன். இங்கு மொழிகள் தொடர்பான புரிதல் எங்கிருந்து தொடங்குகின்றது என்பது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|