பதாதைகளை காட்சிப்படுத்தக் கூடாது என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவல்ல – மஹிந்த தேசப்பிரிய !

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படம், விருப்பு இலக்கம் கொண்ட பதாதைகளை காட்சிப்படுத்தக் கூடாது என்பது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாகும்.
இது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பழைய முறைமைக்கு பழகியுள்ளதன் காரணமாகவே அவர்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்தோடு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். தபால் மூல வாக்குகளையும் அன்றைய தினமே எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 4 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவினை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஏப்ரல் மாதம் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்!
திரையரங்குகளில் தேசிய கீதம் - தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்!
கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது!
|
|