பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  ஊடகமொன்றுக்கு பதிலளிக்கையில் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவில்லை எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: