பதவி விலகிய அமைச்சர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்கள்!

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் பிரதான மூன்று அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக லக்கி ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கபீர் ஹாசிம் அமைச்சராக செயற்பட்ட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக ரிசாத் பதியுதீன் பணியாற்றி வந்தார்.
எனினும் நாட்டில் எழுந்துள்ள நெருக்கடி நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த வாரம் ரிசாத் பதியுதீன் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசாங்கத்தில் செயற்பட்ட ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|