பதவி விலகியவர்கள் குறித்து முறையிடலாம் – பொலிஸார் கோரிக்கை!

Thursday, June 6th, 2019

பதவியிலிருந்து விலகிய ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பற்றிய முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்காக முறைப்பாடுகள் இருக்குமாயின், அவற்றை பொறுப்பேற்பதற்காக பொலிஸ் தலைமையகம் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். இவற்றை இன்று தொடக்கம் எதிர்வரும் 12ம் திகதி வரை அந்த குழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை எழுத்து மூலம் முறைப்பாடுகளை அந்த குழுவிற்கு ஒப்படைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

Related posts: