பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னர் இந்தியா – சீனாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!

Sunday, June 18th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கின்ற நிலையில், சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஜனாதிபதி விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டு சரியாக ஒரு வருடத்துக்கு பின்னர் இந்தியாவின் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார்.

முன்னதாக அவருக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், ஒரு வருடத்தின் பின்னரே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதற்கிடையில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தைக் காட்டிலும் அதிக பங்களிப்பை செய்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக எதிர்வரும் ஒக்டோபரில் சீனாவுக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குங்கள் - வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்ட...
விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர...