பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஊழல் மோசடிகள் ஆணைக்குழு கோரிக்கை!

ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாமையால், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
2015 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற போதும், ஜனாதிபதியால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆணைக்குழுவிற்கு கிடைத்த 22 முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அதன் பதவிகாலத்தினை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|