பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
Friday, February 15th, 2019போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியனவற்றுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேரள கஞ்சாவுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்குள்ளும் போதைப்பொருட்கள் உள்நுழைந்துள்ளன.அப்படியாயின் நிலைமை எவ்வாறுள்ளது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில், போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளின் போது பதவி நிலைகளைக் கருத்திற்கொள்ளாமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது!
ஏற்கனவே நிறைவேற்ற முடியாமற் போனவற்றை ஒரே முறையில் பூர்த்திசெய்து கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - பொ...
இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் - இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!
|
|