பண்ணை பாலத்தில் தவறி கடலில் வீழ்ந்தவர் சடலமாக மீட்பு!

Monday, August 9th, 2021

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமற்போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய வி.கௌதமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பண்ணை பாலத்தடியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளை தவறி வீழ்ந்துள்ளார்.

தவறி வீழ்ந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: