பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ!

Tuesday, August 10th, 2021

பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை செல்லப் பிராணியான நாய் திடீரென இறந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோ...
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...
இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்வு!