பண்ணையாளருக்கும் ஓய்வூதியம்!

Tuesday, October 3rd, 2017

3 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பால் உற்பத்தியில் 85 வீதமான பசும் பால் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற பால்பண்ணையாளர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பால் பண்ணையாளர்களின் பொருளாதார நிலைமையை மேலும் பலப்படுத்துவது இவ்வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும் எனவும், இது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், அடுத்த வருடம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

பால் உற்பத்திப் பொருள் பாவனையில், 12% வீதமான பால்மா, உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தி கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் புதிதாக 3 ஆயிரம் பசுக்களை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது

Related posts: