பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி!
Saturday, December 15th, 2018பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் தேவை கருதி விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை தொடக்கம் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாடசாலை விடுமுறை காரணத்தினால் 750 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று தொடக்கம் அதிகரிக்கும் என வீதியின்பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்தார்.
Related posts:
3,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்த புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் ச...
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!
|
|