பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பயணத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக அதிக சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
தென் ஆபிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரொன் கொவிட் திரிபு தற்போது உலகில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலான ஒரு நிலைமையை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரொன் கொவிட் திரிபானது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றது என ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதுடன், மோசமான நோய் நிலைமைகளை உருவாக்கும் என்பது தொடர்பான தகவல்கள் குறைவாகவே உள்ளது.
ஒமிக்ரொன் திரிபுகள் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கை கனிசமானளவு அதிகரிப்பதுடன், அதன் ஆபத்தும் அதிகமாக காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|