பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்து!

Tuesday, November 30th, 2021

பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

இதேவேளை நாட்டில் மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
செயன்முறைப் பரிட்சை இன்றி சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களத்த...
அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு - 7 தடவைகள் காதில் அறைந்தார் என குற்றச்சாட்டு!