பண்டிகைக்கால முறைகேடுகள் குறித்து பயணிகள் முறையிடலாம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டால் அவை தொடர்பாக உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.
அதிக பணம் வசூலிப்பு, அதிகமாக பயணிகளை ஏற்றுதல், பேருந்து பிரயாணச் சீட்டு வழங்காமை மற்றும் குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்துப் பாதையை மாற்றுவது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.
பயணிகள் இந்த முறைகேடுகளை 1955 அல்லது 011-2333222 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அழைத்து முறைப்பாடுகளைத் தெரிவிக்கமுடியும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட பேருந்துகளில் இடம்பெறும் முறைகேடுகளில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு மிகச் சிறந்த பயணவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related posts:
|
|