பண்டங்கள் – சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை – நிதி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021

பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த வரியை எந்த சதவீதத்தில் அறவிடுவது மற்றும் எத்தகைய பொருட்களுக்கு வரியை குறைப்பது குறித்து அறியத்தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரி கொள்கையை பாரிய மாற்றம் செய்யாமல் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். குறைந்தது 3 வருடத்திற்கேனும் ஒரே வரி கொள்கையின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி வரி அறவீட்டில் மாற்றம் ஏற்படுத்துவதனால், சகலரும் பாதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரி வடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்குச் சலு கைகளை வழங்க முடியாது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்குச் சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காகப் பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.

இதன் காரணமாக மேலும் ஒரு வருடத்திற்கு அரச சேவைக்கு பொது நிதியைச் செலவிட முடியாது.

இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார்.

இந்த அரச ஊழியர்களில் பலர் காலம் கடந்து திருமணம் செய்கின்றனர். இந்த அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திலேயே அவர்களின் பிள் ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல, உயர்கல்வியைக் கற்க ஆரம்பிக்கின்றனர்.

இது அரச ஊழியர்களுக்குப் பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே நாங்கள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளோம்.

தற்போது அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55 இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் அரச சேவைக்கு அனுபவம் கொண்ட ஊழியர்கள் அவசியம். எதிர்காலத்தில் வருடாந்தம் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் சதவீதத் திற்கு அமைய புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் கல்வியமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம். – கல்வி அமைச்சு!
கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை – அம...
எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் - திணைக்களத்த...