பணியில் இருந்து நீக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் – பாதுகாப்பு அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
Sunday, June 18th, 2023இலங்கையிலிருந்து கடமைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் அங்கு தங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரே நடவடிக்கை, அவர்களை பணியில் இருந்து நீக்குவதே என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து இங்கிலாந்து சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாடு திரும்பாத நிலையில் அது தொடர்பில் கேள்வி எழுப்பட்டிருந்தது.
இந்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
இதுபோன்ற பல காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.
அவ்வாறு செயற்படுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புகையிரத நிலையங்களில் மஞ்சள் கோடு!
நிலவும் உலர்ந்த வானிலையில் மாற்றம் ஏற்படும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அதிகரித்த வெப்பநிலை - மார்ச் 01 வரை வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிருங்கள் - ...
|
|