பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது – தொழில் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, May 7th, 2020

நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் கடமையாற்றுவதுடன் குழுவின் பரிந்துரைகள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்: நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அ...
மொடர்னா, பைசரை விட சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, அஸ்ட்ராசெனக்கா செயற்திறன் கூடியவை - இலங்கையின் சிரேஸ்ட...
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...