பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் இபோச பணியாளர்கள் – தொடருந்து சேவைகளும் வழமைபோன்று இடம்பெற்றன!
Saturday, July 9th, 2022இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாமையால், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று மதியம்முதல் கடமையிலிருந்து விலகினர்.
இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நேற்று பிற்பகல், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிப்பதற்காக, தடையின்றி எரிபொருளை விநியோகிக்க இணக்கம் வெளியிடப்பட்டதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சஙகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும், அரச பேருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் அந்த தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் சேபால லியனகே அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை இன்றையதினம் தொடருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து கொழும்புக்கான தொடருந்து சேவைகள் இன்று இடம்பெற மாட்டாது என தொடருந்து திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தொடருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|