பணிப்புறக்கணிப்பு உறுதி : அரச மருத்துவ சங்கம்!

Tuesday, July 31st, 2018

10 கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடனான உடன்படிக்கையின் மூலம் நாட்டின் தொழிற்சந்தையை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லல்,

மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்த மருத்துவ சபையின் அறிக்கையை அடிப்படையாக கொண்ட வர்த்தமானியை வெளியிடாமை,

மருத்துவ சபையில் உள்ள 4 பதவி இடைவெளிகளுக்கான தெரிவுகளை சுகாதார அமைச்சர் தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளாமல் இருக்கின்றமை உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் உள்ளடங்குகின்றன.

Related posts: