பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கமாட்டோம் – வடக்கு புகையிரத கடவைக்காப்பாளர் சங்கம் தெரிவிப்பு!

Monday, October 31st, 2016

நல்லாட்சி அரசால் திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனால் இன்று இடம்பெறவுள்ள புகையிரத கடவை காப்பாளர் பணிப்புறக்கணிப்புக்கு வட,கிழக்கு புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள்என  வடக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு உட்பட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடத்தவுள்ளனர். அது குறித்து கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

மதவாச்சிக்கு அப்பால் நாளை மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புக்கு வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரதக் கடவைக்காப்பாளர்கள் ஆதரவு வழங்கவில்லை. நாம் நியாயமான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளும் போது எமக்கு அவர்கள் ஆதரவு வழங்கவில்லை. நாம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பின் போது அரசு பலவித உடன்பாடுகளுக்கும் வந்தது.

ஆனால் இறுதியில் எமக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. நாம் திட்டமிட்ட வகையில் நல்லாட்சி அரசால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் எமக்கு முழு ஆதரவை வழங்கவில்லை. இனிவரும் காலங்களில் நாம் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதில் எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதால் நாளை இடம்பெறவுள்ள புகையிரதக் கடவைக் காப்பாளர்களின் பணிப்புறக்கணிப்புக்கு வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் ஆதரவு வழங்கவில்லை. – என்றார்.

IMG_7572

Related posts: