பணிப்புறக்கணிப்பக்கு தயாராகும் புகையிரத தொழிற்சங்கம்!

Friday, July 12th, 2019

ரயில்வே திணைக்களத்தின் பல வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்ற 1500 தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும், அவ்வாறு நடந்தால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் ரயில்வே பணியாளர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க இந்த விடயத்தை கூறியுள்ளது.

கடந்த 05 வருடங்களுக்கு அதிக காலமாக திணைக்களத்தின் பல வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்ற 1500 பேருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் செயற்பாடு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு அரசியல் தொடர்புள்ளவர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், அரசியல் ரீதியாக புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டால் அது மற்றுமொரு புகையிரத வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே பணியாளர்களின் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


30 ஆயிரம் கண்ணிவெடிகள் முகமாலையில் இதுவரை மீட்பு!
வரி மோசடியாளர்களை முறையாகக் கண்டறிய நடவடிக்கை - நிதியமைச்சர்!
டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம்  - வேலணை - சாட்டிப் பகுதி முஸ...
வடக்கு, கிழக்கில் வன்முறைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள்!
சேனா படைப்புழுவால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை!