பணிக்கு திரும்பாதுவிடின் விலக்கப்படுவர் – அஞ்சல் சேவையாளர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, June 19th, 2018

அஞ்சல் சேவையாளர்கள் இன்று(19) சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து, சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து பணியாளர்களதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலே குறித்த இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சேவைக்கு சமூகமளிக்காத தற்காலிக, பணிசாரா, பதில் மற்றும் நிரந்தரமற்ற சேவையாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் பணிப்புறக்கணிப்பு இன்று (19) 09வது நாளாகவும் தொடர்வதாக குறித்த முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டாரதெரிவித்திருந்தார்.

Related posts: