பணிகளை செய்ய இடையூறுகள் உள்ளதாக அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு செய்ய தீர்மானம்!

Sunday, September 11th, 2016

பணிகளை முன்னெடுப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்தள்ளது. அமைச்சின் பணிகளை முன்னெடுக்கும் போது மேற்கொள்ளப்படும் தலையீடுகள் இடையூறுகள் தொடர்பில் இவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து நேரடியாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய இந்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். சிக்கல்களை எதிர்நோக்கி வரும் அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் கூடி இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: