பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ இரத்து – இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு!

Saturday, April 23rd, 2022

வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி  பங்குனி 11, 2022 திகதியிட்ட 2022 ஆம் ஆண்டின் பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ வங்கி இரத்து செய்ததுள்ளது.

பணவியல் கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்க இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய முடிவிற்கு இணங்க இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும்.. வங்கிகளில் வைப்புக்களை ஈர்ப்பதற்காக வங்கிகளால் பின்பற்றப்பட்ட இறுக்கமான பணவியல் கொள்கை நடவடிக்கைகளுக்கு இணங்க வங்கிகள் வைப்பு விகிதங்கள் போதுமான அளவில் சரிசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: