பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய சரியான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, February 26th, 2023

தேர்தலுக்கு பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய சரியான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வெளியில் எழுந்துள்ள விடயங்கள் காரணமாக மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அன்றைய தினம் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: