பணநோட்டுகளில் அர்ஜூனவின் கையொப்பம் செல்லுபடியாகுமா?

இலங்கையின் குடியுரிமை இல்லாத ஒருநபர், இலங்கையில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பணநோட்டுகளில் கையொப்பம் இட்டிருப்பது நியாயமானதா? என்பது குறித்து ஆராயும் முகமாக எதிர்வரும் வாரத்தில் நீதிமன்றம் மூலமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன்மகேந்திரன் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமைகொண்டவர். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் மத்தியவங்கியின் ஆளுனர் பதவிக்காக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்படல் வேண்டும். அந்தவகையில் தான் சத்தியப்பிரமாணம் எதுவும் செய்யவில்லை என அர்ஜூன் மகேந்திரன் கோப் அறிக்கையின் முன்பாகக் கூறியிருக்கின்றார்.
இதில் சட்டம் தொடர்பான அதிகாரம் குறித்த பாரியசிக்கல்கள் காணப்படுகின்றது என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|