பட்டாசு வெடிக்க சாவகச்சேரியில் இனித்தடை!

Tuesday, August 14th, 2018

சாவகச்சேரி சந்தியில் பட்டாசு வெடிக்க வைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதென்று சாவகச்சேரி நகரசபை  அறிவித்துள்ளது.

சாவு இறுதி ஊர்வலத்தின்போது நகரின் சந்தியில் பெருமளவு பட்டாசுகள் வெடிக்க வைப்பதால் பெரும் சுகாதாரச் சீர்கேடு காணப்படுகிறது.

வெடிக்கும் பட்டாசுகளின் புகை பயணிகளுக்குப் பாதிப்பை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோயாளிகள் பாதிப்படைகின்றனர். எனவே முன்னரைப்போல சந்தியில் பட்டாசுகள் வெடிக்க வைப்பது தடை செய்யவேண்டும். இனிவரும் நாள்களில் இறுதி ஊர்வலம் உட்பட எந்தக் காரணம் கொண்டும் சந்தியில் பட்டாசுகள் வெடிக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிவித்தல் சந்தியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை முன்னைய ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அறிவித்தல் சந்தியில் பொருத்தப்பட்டிருந்ததால் பட்டாசுகள் வெடிக்க வைக்கப்படுவதில்லை. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் சிலர் ஓரிரு பட்டாசுகளைச் சந்தியில் வெடிக்கவைத்து தற்போது அளவுக்கு அதிகமாக வெடிக்க வைக்க முற்படுகின்றனர் என தெரியவருகின்றது.

Related posts: