பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் படுகாயம்!

கட்டான – கிம்புலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மீன் ஏற்றுமதியால் திணறும் இலங்கை!
தீக்காயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண் பலி !
அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்...
|
|