பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு கடன் வசதி!

Saturday, March 10th, 2018

அரச பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறாத உயர்தர மாணவர்களுக்கு, பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான கடன்தொகை கோரலுக்காக வழங்கப்பட்டிருந்த காலஎல்லை மேலும்ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு  தெரிவித்துள்ளது.

அரச வங்கிகளால் வழங்கப்படும் இந்த கடன் கோரல் காலம் இதற்குப் பொறுப்பான அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் வசதி உயர் கல்வி அமைச்சினால் இனங்காணப்பட்ட 8 நிறுவனங்களில் 38 பாடத்திட்டங்களுக்காக வழங்கப்படவுள்ள நிலையில் 4 வருட காலப்பகுதிக்காக 8 இலட்சம் ரூபாய்வரை வட்டியின்றி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: