பட்டப்பகலில்  குடும்பப் பெண்ணின்  ஐந்தரைப் பவுண் தாலிக் கொடி அறுப்பு 

Tuesday, August 1st, 2017
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(01) பட்டப்பகல் வேளையில் குடும்பப் பெண்ணொருவரின்  ஐந்தரைப் பவுண் தாலிக் கொடியொன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இன்று காலை வீதியால்  நடந்து சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இனம் தெரியாத நபரொருவர் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: