பட்டதாரி பயிலுனர்களை தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை!

Tuesday, March 1st, 2022

பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020 வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதால் அது தொடர்பான விண்ணப்பங்களை கோரும் பணி இணைய (online) வழி ஊடாக மேற்கொள்ள கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக https://dorec.moe.gov.lk/ ஊடாக கல்வி அமைச்சின் இணையதளத்திற்கு பிரவேசித்து 01.03.2022 திகதிமுதல் விண்ணப்பிக்க முடியும்ி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: