பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, October 13th, 2020

பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் முதலாவது கட்டம் கடந்த செப்ரெம்பர் 2 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சுழற்சி முறையில் முகாமைத்துவ, தலைமைதுவம் உள்ளிட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சிகள் இன்று ஆரம்பமாக இருந்த போதும் அதனை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இராணுவ முகாங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பயிலுனர் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அவற்றுக்கு வரும் 16ஆம் திகதிவரை அனுமதியளிக்குமாறும் அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: