பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை – நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச்சேவை அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, September 14th, 2021அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கத்தின் பிரதம செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாதத்துடன் பயிற்சிக்காலம் நிறைவடைவதால், உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுச்சேவை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கருத்து தெரிவிக்கையில் –
பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பயிலுநர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளதுடன் நியமனம் வழங்குவதற்கு முன்னர், பதவி வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|